X –VIDEOS –Film Review







இயக்குனர் ஹரியிடம் பயிற்சி பெற்றுள்ள சாஜு சுந்தர், சமூக சிந்தனையுடன்,  துணிவாக, இனைய தளங்களில் தளிர் நடை போடும் அந்தரங்கமான வீடியோக்கள் பற்றியும் இதன் பின்னணியில் இருந்து இத்தகையவற்றை மொபைல் போன் மூலமாக படம்  பிடிக்கும் விதம் பற்றியும் விரிவாக சொல்லியுள்ளார்!

பிரதான வேடமேற்று நடித்துள்ள நடிகைகளும் சமூக விழிப்புணர்ச்சியை உண்டாக்க இப்படம் உதவும் என்கிற ஒரு காரணத்திற்காக, இத்தகைய காட்சிகளில் நடித்துள்ளார்கள்!

சைபர் க்ரைம் அமைப்பு கூட ஓர் அளவிற்குத்தான் இந்தமாதிரியான விஷயங்களில் முழுமையாக ஈடுபட முடியும் என்பதையும் சொல்லியிருக்கிறார்கள்!

இளைய சமுதாயத்தினர், காதல் வாழ்க்கையில் கூட சற்று எச்சரிக்கையாக இருத்தல் அவசியம் என்பதையும் அழுத்தமாக சொல்லியிருக்கிறார்கள்!

விக்ரம் என்கிற கதாபாத்திரத்தில் வரும் ப்ரபூஜித் நன்கு நடித்துள்ளார்.


வின்சென்ட் அமல்ராஜின் ஒளிப்பதிவும் கே. ஆனந்த லிங்க குமாரின் படத்தொகுப்பும் கச்சிதம்.

ஜொஹானின் இசைஅமைப்பும் படத்தின் ஓட்டத்திற்கு உரு துணையாக நிற்கிறது!

சமூக நலனில் அக்கறை கொண்டு ஒரு விழிப்புணர்வை உண்டாக்கும் படமிது!

Rating-***1/2

Comments