தயாரிப்பு-
Wunderbar Films
எழுதி இயக்கியவர் -பா. ரஞ்சித்
தணிக்கை
சான்றிதழ் -U / A
ஓட்ட நேரம் -166 நிமிடங்கள்
நடிப்பு
-சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , நானா
படேகர் ஈஸ்வரி ராவ் ஹுமா
குரேஷி சமுத்திரக்கனி சம்பத் ராஜ், அஞ்சலி
பாட்டீல் மற்றும் பலர்.
மதிப்பீடு
-****
கபாலி படத்தின் மூலமாக இணைந்த ரஜினி
- பா. ரஞ்சித் ஜோடி மீண்டும்
ஒரு முறை இந்த காலா
படத்தில் மீண்டுமொருமுறை இணைத்து மற்றுமொரு சூப்பர்
ஹிட் படத்திற்கு வித்திட்டுள்ளார்கள்!
தனக்கே
உரித்தான தனியொரு பாணியில் தனது
நடிப்பாலும் நகர்வுகளாலும் படம் பார்க்கும் அனைவரையும்
தன்பக்கம் சுண்டி
இழுக்கிறார், ரஜினி! நடை, உடை,
பாவனை, தனித்துவம் மிக்க அவரது ஸ்டைல்
என படம் முழுவதும் அவரது
பராக்கிரமம் தான் கோடி கட்டி
பறக்கிறது! சண்டை காட்சிகளிலும் தூள்
கிளப்பியுள்ளார்! குறிப்பாக, சம்பத் ராஜை அடித்து
நொறுக்கும் காட்சியில் தனிமுத்திரை பதித்துள்ளார்!
கருப்பு
தங்கமான ரஜினி கருப்பு உடை
தரித்து படம் முழுவதிலும் நிறைவாக
உலா வந்து படம் பார்ப்போரை
பரவசமாக்குகிறார்!
நானா படேகரோடு அவர் வாதம் செய்யும்
காட்சிகள் அனைத்திலும் அனல் தெறிக்கிறது! நிச்சயம்
ரஞ்சித்தின் வசனத்திற்கு ஒரு சபாஷ்!
வில்லனாக
தோன்றும் நானா படேகர், கதாபாத்திரத்திற்கு
ஏற்ற கச்சிதமான தேர்வு! குறைவான வசனம்;
நிறைவான நடிப்பு!
ஈஸ்வரி
ராவ், சூப்பர் ஸ்டாரின் மனைவியாக
வளம் வந்து அசத்தியுள்ளார்!
ரஜினியின்
நண்பனாக வரும் சமுத்திரக்கனியும் துடிப்போடு
நடித்துள்ளார்!
மும்பை
தாராவி பகுதியின் முடி சூடா மன்னன்,
காலா என்கிற கரிகாலன்! இப்பகுதி
மக்களுக்காக தன உயிரையும் தாரை
வார்த்து தருவதற்கு தயங்காதவர்!
அரசியல்வாதியான
ஹரிதேவ் அபயங்கார் அந்த இடத்தை தன
வசம் கொணர்ந்து அரசியல் ஆதாயம் தேட
முற்படுகிறார்!
காலா எப்படி ஹரிதேவின் திட்டங்களை
முறியடிக்கிறார் என்பதே படத்தின் சாரம்.
அரசியல்
அர்த்தம் கொண்ட தூக்கலான வசனமும்
அங்கங்கே உண்டு!
அனைத்து
சாராரையும் திருப்தி செய்யும் ஒரு ஜனரஞ்சகமான படம்!
-R.S.Prakash
Comments
Post a comment